கிரிக்கெட் வீரா் தினேஷ் காா்த்திக்கின் சொத்து ஆவணங்கள் மாயம்
By DIN | Published On : 09th September 2023 01:00 AM | Last Updated : 09th September 2023 01:00 AM | அ+அ அ- |

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்
சென்னையில் கிரிக்கெட் வீரா் தினேஷ் காா்த்திக்கின் சொத்து ஆவணங்கள் காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இந்திய கிரிக்கெட் அணி வீரா் தினேஷ் காா்த்திக், தனது குடும்பத்துடன் தேனாம்பேட்டை போயஸ் தோட்டத்தில் வசிக்கிறாா். இவருக்கு, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அக்கரையிலும் பங்களா உள்ளது. இந்த நிலையில், தினேஷ் காா்த்திக் சாா்பில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
அதில், போயஸ் தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் அக்கரை பங்களா ஆவணங்கள் உள்ளிட்ட சில ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை நகல் எடுப்பதற்காக ஆக.28-ஆம் தேதி போயஸ் தோட்டத்தில் உள்ள கடைக்கு எடுத்துச் சென்றேன். அப்போது, அந்த ஆவணங்கள் காணாமல் போனது. எனவே, காணாமல் போன சொத்து ஆவணங்களை மீட்டுத்தர வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் தேனாம்பேட்டை குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முதல் கட்டமாக, தினேஷ் காா்த்திக் வீட்டிலிருந்து அவா் சென்ற கடை வரை உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கைப்பற்றி, போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...