உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி வீரர்கள் விவரங்களை அவர்களின் குடும்பத்தினர் அறிவிக்கும் நெகிழ்ச்சியான விடியோ ஒன்றை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 5 முதல் தொடங்கி நடைபெற உள்ளது. உலகக் கோப்பைக்கான அணி விவரங்களை ஒவ்வொரு அணியும் வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில், உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி வீரர்கள் விவரங்களை அவர்களின் குடும்பத்தினர் அறிவிக்கும் நெகிழ்ச்சியான விடியோ ஒன்றை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
Our 2023 @cricketworldcup squad introduced by their number 1 fans! #BACKTHEBLACKCAPS #CWC23 pic.twitter.com/e7rgAD21mH
â BLACKCAPS (@BLACKCAPS) September 11, 2023
அந்த விடியோவில் நியூசிலாந்து அணி வீரர்களை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் விரர்களின் ஜெர்சி எண்ணுடன் அறிமுகம் செய்கின்றனர்.
காயம் காரணமாக அணியில் இடம்பெறாமலிருந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அணிக்குத் திரும்பியுள்ளார். இந்த முறையும் உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை அவர் வழிநடத்த உள்ளார். கடந்த உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இம்முறை உலகக் கோப்பையை கைப்பற்றும் முனைப்போடு நியூசிலாந்து களமிறங்கவுள்ளது.
உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிரெண்ட் போல்ட், மார்க் சாப்மேன், டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), லோகி ஃபெர்க்யூசன், மாட் ஹென்றி, டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், கிளென் பிளிப்ஸ் (விக்கெட் கீப்பர்), ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், ஈஷ் சோதி, டிம் சௌதி மற்றும் வில் யங்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





