பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்கள் காயம்: மீதமுள்ள ஆசியக் கோப்பை போட்டிகளில் விளையாடுவது சந்தேகம்!

ஆசியக் கோப்பை தொடரின் மீதமுள்ள போட்டிகளில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்கள் ஹரிஷ் ரௌஃப் மற்றும் நசீம் ஷா விளையாடுவர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்கள் காயம்: மீதமுள்ள ஆசியக் கோப்பை போட்டிகளில் விளையாடுவது சந்தேகம்!

ஆசியக் கோப்பை தொடரின் மீதமுள்ள போட்டிகளில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்கள் ஹரிஷ் ரௌஃப் மற்றும் நசீம் ஷா விளையாடுவர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்றும், நேற்று முன் தினமும்  இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்கள் ஹரிஷ் ரௌஃப் மற்றும் நசீம் ஷா இருவரும் காயமடைந்தனர். 

இந்த நிலையில், ஆசியக் கோப்பை தொடரின் மீதமுள்ள போட்டிகளில் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்கள் ஹரிஷ் ரௌஃப் மற்றும் நசீம் ஷா விளையாடுவர்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் அணி நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்கள் ஹரிஷ் ரௌஃப் மற்றும் நசீம் ஷாவுக்குப் பதிலாக ஷாநவாஸ் தானி மற்றும் ஸாமன் கான் அணியில் மாற்று வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஹரிஷ் ரௌஃப் மற்றும் நசீம் ஷாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இவர்கள் இருவரும் அணியில் இணைந்துள்ளனர். இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

பாகிஸ்தான் நாளை மறுநாள் (செப்டம்பர் 14) இலங்கைக்கு எதிரான சூப்பர் 4  போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com