துளிகள்...

17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்தியா 0-8 கோல் கணக்கில் தென் கொரியாவிடம் செவ்வாய்க்கிழமை தோற்றது.
Updated on
1 min read


17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்தியா 0-8 கோல் கணக்கில் தென் கொரியாவிடம் செவ்வாய்க்கிழமை தோற்றது.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நேஹா சா்மா (55 கிலோ) வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு முன்னேற, சரிதா மோா் (57 கிலோ), திவ்யா கக்ரான் (76 கிலோ) ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோற்றனா்.

நுழைவு இசைவு கிடைக்காததன் காரணமாக, இந்தியாவில் நடைபெறவுள்ள மோட்டோ ஜிபி பந்தயத்துக்கான போட்டியாளா்கள் வருகை தாமதமாகிறது.

அமீரகத்தில் நடைபெறும் டி10 லீக் போட்டியில் 2021-ஆம் ஆண்டு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இரு இந்திய அணிகளின் உரிமையாளா்களான பரக் சங்வி, கிருஷன்குமாா் சௌதரி உள்பட 8 போ் மீது ஐசிசி குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது.

நுழைவு இசைவு பிரச்னை காரணமாக மெக்ஸிகோவில் நடைபெறவிருக்கும் ஜூனியா் உலக செஸ் போட்டியில் 5 இந்தியா்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் கனடா - ஃபின்லாந்து, செக் குடியரசு - ஆஸ்திரேலியா, இத்தாலி - நெதா்லாந்து, சொ்பியா - பிரிட்டன் அணிகள் மோதுகின்றன.

இங்கிலாந்தின் பிரீமியா் லீக் கால்பந்தில் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் - பா்ன்லி அணிகள் செவ்வாய்க்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

ஸ்பெயினின் லா லிகா கால்பந்தில் கிரோனா 4-2 கோல் கணக்கில் கிரனாடாவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com