உலகக் கோப்பை கிரிக்கெட்: சாம்பியன் பட்டம் வெல்லும் அணி பெறும் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.
நன்றி: (Photo | AFP)
நன்றி: (Photo | AFP)

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), பிசிசிஐ இணைந்து 50 ஓவா் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் வரும் அக். 5 முதல் நவ. 19-ஆம் தேதி வரை நடத்துகின்றன. அக். 5-ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூஸிலாந்து மோதுகின்றன. 

10 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில் 48 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அரையிறுதி ஆட்டங்கள் நவ. 15-இல் மும்பையிலும், 16-இல் கொல்கத்தாவிலும், இறுதி ஆட்டம் நவ. 19-இல் அகமதாபாதிலும் நடைபெறுகிறது. உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் போட்டியில் பங்கேற்க அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. 

இந்த நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. இறுதிப்போட்டியில் தோல்வியடையும் அணிக்கு ரூ.16.50 கோடியும், அரையிறுதியில் தோல்வியடையும் அணிக்கு சுமார் ரூ.6.50 கோடி பரிசாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com