சீனாவில் கோலாகலமாகத் தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள்!

சீனாவின் ஹாங்ஸு நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று (செப்டம்பர் 23) தொடங்கின.
சீனாவில் கோலாகலமாகத் தொடங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகள்!

சீனாவின் ஹாங்ஸு நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று (செப்டம்பர் 23) தொடங்கின.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா சீனாவின் ஹாங்ஸுவில் உள்ள ஒலிம்பிக் விளையாட்டு மைதானத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலகலமாகத் தொடங்கியது. 

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஸு நகரில் நடைபெறுகின்றன. இன்று (செப்டம்பர் 23) முதல் தொடங்கியுள்ள இந்தப் போட்டிகள் வருகிற அக்டோபர் 8 ஆம் தேதி வரை 16 நாள்கள் நடைபெறவுள்ளன. சீனாவின் 6  நகரங்களில் நடைபெறும்  இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 45  நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 61 பிரிவுகளில் நடைபெறும் 40 விளையாட்டுப் போட்டிகளில் 12 ஆயிரம் பங்கேற்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com