இந்தியா - ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள்: சாதனைத் துளிகள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 400 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா 2-வது ஒருநாள்: சாதனைத் துளிகள்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 400 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று எடுத்துள்ள 399 ரன்களே ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குவித்துள்ள அதிகபட்ச ஸ்கோர் ஆகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது நிகழ்த்தப்பட்ட சாதனைகள் சிலவற்றை பின்வருமாறு காணலாம்.

இந்தூரில் முதலில் பேட்டிங் செய்து இந்திய அணி குவித்த ரன்கள் (ஒருநாள்)

292/9 - இங்கிலாந்துக்கு எதிராக - 2008
418/5 - மே.இ.தீவுகளுக்கு எதிராக - 2012
247/9 - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக - 2015
385/9 - நியூசிலாந்துக்கு எதிராக - 2023
399 /5 - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக - 2023

இந்தியாவுக்கு எதிராக பந்துவீசி அதிக ரன்கள் கொடுத்தவர்கள் (ஒருநாள்)

நுவான் பிரதீப் (இலங்கை)  - 106/0 - மொஹாலி, 2017
டிம் சௌதி (நியூசிலாந்து) - 105/0 - கிறிஸ்ட்சர்ச், 2009
கேமரூன் கிரீன் (ஆஸ்திரேலியா) - 103/2 - இந்தூர், 2023
ஜேக்கப் டஃபி (நியூசிலாந்து) - 100/3 - இந்தூர், 2023

அதிக ரன்கள் கொடுத்த ஆஸ்திரேலிய வீரர்கள் (ஒருநாள்)

மிக் லீவிஸ் - 113/0 - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக - ஜோஹன்ஸ்பெர்க், 2006
ஆடம் ஸாம்பா - 113/0  - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக - செஞ்சூரியன், 2023
கேமரூன் கிரீன் - 103/2 - இந்தியாவுக்கு எதிராக - இந்தூர், 2023
ஆண்ட்ரு டை - 100/0 - இங்கிலாந்துக்கு எதிராக - நாட்டிங்ஹம், 2018
ஜெய் ரிச்சர்ட்சன் - 92/3 - இங்கிலாந்துக்கு எதிராக - நாட்டிங்ஹம், 2018 

ஒரு ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த ஆஸ்திரேலிய வீரர்கள் (ஒருநாள்)

சைமன் டேவிஸ் - 26 ரன்கள் - இங்கிலாந்துக்கு எதிராக -பெர்த், 1987
கிரைக் மெக்டெர்மோட் - 26 ரன்கள் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக - செஞ்சூரியன், 1994
சேவியர் டோஹெர்டி - 26 ரன்கள் - இந்தியாவுக்கு எதிராக - பெங்களூரு, 2013
ஆடம் ஸாம்பா - 26 ரன்கள் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக - செஞ்சூரியன், 2023
கேமரூன் கிரீன் - 26 ரன்கள் - இந்தியாவுக்கு எதிராக - இந்தூர், 2023

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணிகள்

இங்கிலாந்து - 481/6 - நாட்டிங்ஹம், 2018
தென்னாப்பிரிக்கா - 438/9 -ஜோஹன்ஸ்பெர்க், 2006
தென்னாப்பிரிக்கா - 416/5 - செஞ்சூரியன், 2023
இந்தியா - 399/5 - இந்தூர், 2023
இந்தியா - 383/6 - பெங்களூரு, 2013

ஒருநாள் போட்டி ஒன்றில் இந்திய வீரர்கள் அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள்

19 சிக்ஸர்கள் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக - பெங்களூரு, 2013
19 சிக்ஸர்கள் - நியூசிலாந்துக்கு எதிராக - இந்தூர், 2023
18 சிக்ஸர்கள் - பெர்முடாவுக்கு எதிராக - போர்ட் ஆஃப் ஸ்பெயின், 2007
18 சிக்ஸர்கள் - நியூசிலாந்துக்கு எதிராக - கிறிஸ்ட்சர்ச், 2009
18 சிக்ஸர்கள் - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக - இந்தூர், 2023

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3,000 சிக்ஸர்கள் அடித்துள்ள முதல் அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com