ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் பிரிவு 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி மற்றும வெண்கலப் பதக்கங்களை இந்தியா தட்டிச் சென்றது.
இந்திய வீரர்கள் கார்த்திக் குமார் வெள்ளிப் பதக்கமும், குல்வீர் சிங் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இதில் பஹ்ரைனைச் சேர்ந்த பிர்ஹானு தங்கப் பதக்கம் வென்றார். இத்துடன் 7-வது நாளான இன்று வரை இந்தியா 10 தங்கம், 14 வெள்ளி 14 வெண்கலம் என 38 பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பதக்கப் பட்டியலில் போட்டியை நடத்தும் சீனா முதலிடத்திலும், ஜப்பான் இரண்டாம் இடத்திலும், தென் கொரியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்த பதக்கப் பட்டியலில் 38 பதக்கங்களுடன் இந்தியா 4-வது இடத்தில் அங்கம் வகிக்கிறது.