12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 12-ஆவது சுற்றில், இந்தியாவின் குகேஷ், வைஷாலி வெற்றி பெற்றுள்ளார்கள்.
குகேஷ்
குகேஷ்

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 12-ஆவது சுற்றில், இந்தியாவின் குகேஷ், வைஷாலி வெற்றி பெற்றுள்ளார்கள். இதர இந்தியர்களான பிரக்ஞானந்தா, கோனெரு ஹம்பி டிரா செய்தனர். விதித் சந்தோஷ் பேபியானோ கருனாவிடம் தோல்வியுற்றார்.

12ஆவது சுற்றின் ஒபன் பிரிவில், குகேஷ் - அஜர்பைஜானின் நிஜாத் அபாசோவை வீழ்த்தினார்.

ரஷியாவின் இயன் நெபோம்னியச்சியுடன் இந்திய வீரர் பிரக்ஞானந்தா டிரா செய்து அசத்தினார். அமெரிக்காவின் ஹிகரு நகமுரா - பிரான்ஸின் ஃபிரெஸோ அலிரெஸாவையும் வீழ்த்தினர். அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா -இந்திய வீரர் விதித் சந்தோஷை வீழ்த்தினார்.

குகேஷ்
தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

புள்ளிப் பட்டியல்:

14 சுற்றுகள் கொண்ட போட்டிகளில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி. 12ஆம் சுற்று முடிவில் இந்திய வீரர் குகேஷ், அமெரிக்காவின் ஹிகரு நகமுரா, ரஷியாவின் இயன் நெபோம்னியச்சியுடன் 7.5 புள்ளிகளுடன் மூவருமே முதலிடத்தில் சமநிலையில் உள்ளார்கள்.

தமிழக வீரர் பிரக்ஞானந்தா 6 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் மற்றுமொரு இந்திய வீரரான விதித் சந்தோஷ் 5 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறார்.

மகளிர் பிரிவில் வைஷாலி அன்னா முஸிஷுக்கினை வீழ்த்தினார். மகளிர் பிரிவில் டான் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். கொனேரு ஹம்பி 6 புள்ளிகளுடன் 3வது இடத்தினை 3 வீராங்கனைகளுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். வைஷாலி 5.5 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com