தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

மும்பைக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 9 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியுற்றது.
ஆசுதோஷ் ஷர்மா
ஆசுதோஷ் ஷர்மாPTI

ஐபிஎல் போட்டியின் 33-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 9 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வியாழக்கிழமை வென்றது.

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. 19.1 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்து, 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பஞ்சாப் அணி வீரர் ஆசுதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் அடித்து மும்பைக்கு பயத்தை காட்டினார். இதில் 2 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் பும்ராவின் யார்க்கர் பந்தினை ஸ்வீப் ஷாட் அடித்தார். இந்த சிக்ஸரை குறித்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.

ஆசுதோஷ் ஷர்மா
சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

பஞ்சாப் அணிக்கு ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அவர் விளையாடிய நான்கு போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளார். 4 போட்டிகளில் 156 ரன்கள் 205 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடியுள்ளார். சராசரி 52 என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசுதோஷ் ஷர்மா
சொந்த மண்ணில் மோசமான தோல்வி; ஷுப்மன் கில் கூறுவதென்ன?

ஆசுதோஷ் சர்மாவின் ஐபிஎல் இன்னிங்ஸ்:

குஜராத் அணிக்கு எதிராக 31 (17)

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 33* (15)

ராஜஸ்தான் அணிக்கு எதிராக 31 (16)

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 61 (28)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com