சொந்த மண்ணில் மோசமான தோல்வி; ஷுப்மன் கில் கூறுவதென்ன?

சொந்த மண்ணில் தில்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான மோசமான தோல்விக்குப் பிறகு ஷுப்மன் கில் தோல்விக்கான காரணம் குறித்துப் பேசியுள்ளார்.
ஷுப்மன் கில்
ஷுப்மன் கில்படம் | ஐபிஎல்

சொந்த மண்ணில் தில்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான மோசமான தோல்விக்குப் பிறகு குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தோல்விக்கான காரணம் குறித்துப் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 17) அகமதாபாதில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்த தில்லி கேப்பிடல்ஸ் வெறும் 89 ரன்களுக்கு குஜராத் டைட்டன்ஸை ஆட்டமிழக்கச் செய்தது. அதன்பின் 90 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய தில்லி கேப்பிடல்ஸ் 8.5 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

ஷுப்மன் கில்
டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே!

இந்த நிலையில், சொந்த மண்ணில் ஏற்பட்ட மோசமான தோல்விக்குப் பிறகு குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் தோல்விக்கான காரணம் குறித்துப் பேசியுள்ளார்.

தோல்விக்கான காரணம் குறித்து போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: எங்களது பேட்டிங் மிகவும் சராசரியானதாக இருந்தது. தோல்வியைப் பற்றி யோசிக்காமல் அதிலிருந்து நகர்ந்து வலிமையாக திரும்பி வர வேண்டும். ஆடுகளம் சிறப்பானதாக இருந்தது. சில ஆட்டமிழப்புகளை பார்க்கும்போது, அதில் ஆடுகளத்தைக் குறை கூறுவதற்கு ஒன்றுமில்லை. தவறான ஷாட்டுகளை தேர்ந்தெடுத்து விளையாடியதே விக்கெட்டுகளை இழக்க காரணமென்று கூறுவேன்.

எதிரணி 89 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்தும்போது, யாராவது ஒருவர் இரண்டு ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுக்கவில்லையென்றால் ஆட்டம் எதிரணிக்கு சாதகமானதாகவே இருக்கும். நடப்பு ஐபிஎல் தொடரின் பாதியில் இருக்கிறோம். இதுவரை 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்து விளையாடவுள்ள 7 போட்டிகளில் 5 - 6 போட்டிகளில் கடந்த இரண்டு சீசன்களைப் போலவே வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

ஷுப்மன் கில்
சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com