சுனில் நரைனை தொடக்க ஆட்டக்காரராக மாற்றியவர் இவர்தான்: ரிங்கு சிங்

தொடக்க ஆட்டக்காரராக சுனில் நரைன் மாறியதற்கு காரணமானவர் குறித்து கொல்கத்தா அணியின் ரிங்கு சிங் பேசியுள்ளார்.
சுனில் நரைன்
சுனில் நரைன் படம் | ஐபிஎல்

தொடக்க ஆட்டக்காரராக சுனில் நரைன் மாறியதற்கு காரணமானவர் குறித்து கொல்கத்தா அணியின் ரிங்கு சிங் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நேற்று முன் தினம் (ஏப்ரல் 16) நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுனில் நரைன் டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 56 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார்.

சுனில் நரைன்
ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

இந்த நிலையில், சுனில் நரைன் தொடக்க ஆட்டக்காரராக மாறியதற்கு கௌதம் கம்பீரே காரணம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரிங்கு சிங், கம்பீருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

கௌதம் கம்பீர்
கௌதம் கம்பீர் படம் | கேகேஆர் (எக்ஸ்)

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சுனில் நரைன் பேட்டிங் செய்த விதத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு போட்டியிலும் அணிக்காக அவர் ரன்களை சேர்க்கிறார். அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டுமென்பது கௌதம் கம்பீருடைய யோசனை. சுனில் நரைன் வலைப்பயிற்சியில் கடுமையாக உழைக்கிறார். முன்பெல்லாம் எல்லா பந்துகளையும் அடிக்க வேண்டும் என பேட்டினை சுழற்றுவார். ஆனால், தற்போது அவர் ஒவ்வொரு பந்துக்கும் ஏற்றவாறு அற்புதமாக விளையாடுகிறார் என்றார்.

சுனில் நரைன்
ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

கடந்த 2017 ஆம் ஆண்டு கௌதம் கம்பீர் வழிநடத்திய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சுனில் நரைன் வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரராக மாறினார். அதன்பின் அந்த சாதனை கே.எல்.ராகுல் (14 பந்துகளில்), பாட் கம்மின்ஸ் (14 பந்துகளில்), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (13 பந்துகளில்) போன்ற வீரர்களால் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com