டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பைக்காக கேன் வில்லியம்சன் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து அறிவித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. அமெரிக்கா மற்றும் மே.இந்திய தீவுகள் அணிகள் இணைந்து நடத்தும் இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.

குரூப் ஏ, குரூப் பி, குரூப் சி, குரூப் டி என்று 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. அதில், நியூசிலாந்து அணி இடம்பெற்றுள்ள குரூப் சி பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், உகான்டா, பாபுவா நியூ கினியா ஆகிய அணிகள் உள்ளன.

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான கேன் வில்லியம்சன் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து அறிவித்துள்ளது. இதன்மூலம் டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணியை கேன் வில்லியன்சன் 4வது முறையாக வழிநடத்தவுள்ளார்.

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், டிரெண்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, ஃபெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதி. ரீஸர்வ் வீரர்: பென் சியர்ஸ்

அதேசமயம் அணியில் ஏதேனும் மாற்றங்களை செய்ய விரும்பும் அணிகளுக்கு மே 25ஆம் தேதி வரை கால அவகாசமும் பிசிசிஐ வழங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com