
முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவது கிரிக்கெட் உலகில் சகஜம்.
பெரும்பாலும் ஆர்சிபி அணி, விராட் கோலியை விமர்சித்து கம்பீர் பேசியதுதான் இந்தப் பிரச்னைகளுக்கு தொடக்க புள்ளியாக அமைந்திருக்கும்.
2023ஆம் ஆண்டு பெங்களூரு - லக்னெள அணிகள் மோதிய போட்டியின்போது விராட் கோலி மற்றும் கெளதம் கம்பீர் மோதிக் கொண்ட நிலையில், இருவருக்கும் போட்டியின் ஊதியத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் தேர்வாகியுள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என அசத்தலாக வெனறது. அடுத்து ஒருநாள் தொடர் நாளை (ஆக.2) முதல் தொடங்கவிருக்கிறது.
ஒருநாள் தொடருக்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் விராட் கோலி கம்பீர் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஏற்கனவே கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக பதவியேற்ற பிறகு கோலி குறித்து நல்ல விதமாகவே பேசினார். கோலியும் இது குறித்து எங்களுக்குள் இருக்கும் நட்பு யாருக்கும் தெரியாது. தனிப்பட்ட முறையிலானது எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இருவரும் தில்லையை சேர்ந்தவர்கள். இந்திய ரசிகர்கள் எப்படியோ ஒருவழியாக மோதல் முடிவடைந்து சமாதானம் ஆகிவிட்டதாக சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார்கள்.
டி20யில் ஓய்வு பெற்ற விராட் கோலி ஒருநாள் தொடரில் இலங்கைக்கு எதிரான போட்டியில் களமிறங்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.