
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. கீமர் ரோச் டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்
கிரைக் பிரத்வெயிட் (கேப்டன்), ஜோஷ்வா டி சில்வா (துணைக் கேப்டன்), அலிக் அதனாஸ், கீஸி கார்ட்டி, பிரையன் சார்லஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜேசன் ஹோல்டர், காவெம் ஹாட்ஜ், டெவின் மிலாக், ஷமர் ஜோசப், மிக்கில் லூயிஸ், குடகேஷ் மோட்டி, கீமர் ரோச், ஜேடன் சீல்ஸ் மற்றும் ஜோமல் வாரிக்கேன்.
டெஸ்ட் தொடர் விவரம்
முதல் டெஸ்ட் - டிரினிடாட், (ஆகஸ்ட் 7 - ஆகஸ்ட் 11)
இரண்டாவது டெஸ்ட் - கயானா, (ஆகஸ்ட் 15 - ஆகஸ்ட் 19)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.