
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக கவனம் செலுத்த வேண்டுமென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று (ஆகஸ்ட் 7) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவை 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி அதன் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரை வென்று அசத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக கவனம் செலுத்த வேண்டுமென இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சரியாக விளையாடாதது மிகப் பெரிய கவலையளிக்கக் கூடிய விஷயமில்லை. ஆனால், வீரர்கள் அனைவரும் அவர்களது தனிப்பட்ட ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். இலங்கைக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக அழுத்தத்தில் இருந்தோம். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தொடரை இழந்ததால் இந்த உலகமே அழிந்துவிட்டது என்று கிடையாது. பல ஆண்டுகளாக இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.