
இந்திய அணி கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, டெஸ்ட் தொடரை வென்று தாயகம் திரும்பியது. இந்த நிலையில், இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது இந்திய அணி.
பார்டர் கவாஸ்கர் டிராபி எனப்படுவது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியினை குறிக்கும். இந்த டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியை பெறுமென முன்னாள் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இந்நிலையில் ரவி சாஸ்திரி கூறியதாவது:
பும்ரா, ஷமி உடல்நிலை நன்றாக இருக்கிறது, சிராஜும் இருக்கிறார். இவர்களுடன் அஸ்வின், ஜடேஜா மாதிரியான் ஆள்களும் இருக்கிறார்கள். இந்திய அணியில் வலுவான வீரர்கள் இருக்கிறார்கள.
இந்தியாவுடன் நல்ல பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். பேட்டிங் மட்டும் நன்றாக செய்தால்போதுமானது மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி விடலாம்.
கடைசி 5-8 வருடங்களில் இந்த இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டிகள் எவ்வளவு சிறப்பாக இருக்கின்றன என்பது தெரியும். அதனால் பார்டர் கவாஸ்கர் டிராபி மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியா பழிதீர்க்க காத்திருக்கும். இரண்டுமுறை தோல்வியுற்றதால் ஆஸி. அணி மிகுந்த ஆவலுடன் இருப்பார்கள்.
ஆஸி.யின் வேகப் பந்து வீச்சாளர்களை இந்தியா எப்படி சமாளிக்குமென்பது முக்கியமான காரணியாக இருக்கும். தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள், சுழல்பந்து வீச்சாளர்கள் அங்கு இருக்கிறார்கள். அதேபோல் இந்தியாவின் பந்துவீச்சுக்கும் எல்லோரும் காத்திருக்கிறார்கள் என்றார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸி. ஆதிக்கம் செலுத்தியிருந்தது. டி20யில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
சமீபத்தில் ரிக்கி பாண்டிங் ஆஸி. அணி 3-1 என வெற்றி பெறுமென கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.