அடுத்த கட்ட நடவடிக்கை இதுதான்..! வினேஷ் போகத் வழக்கறிஞர் கூறுவது என்ன?

விளையாட்டுகளுக்கான சா்வதேச நடுவா் மன்றம் வினேஷ் போகத்தின் மனுவை தள்ளுபடி செய்ததுக்குப் பிறகு வழக்கறிஞர் கூறுவது என்ன...
வினேஷ் போகத்
வினேஷ் போகத்IANS
Published on
Updated on
1 min read

பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தத்தில் பங்கேற்ற வினேஷ் போகத், முதல் சுற்றிலேயே நடப்பு சாம்பியனை அசத்தலாக வீழ்த்தினாா். அடுத்தடுத்த சுற்றுகளிலும் வென்ற அவா், இறுதிச்சுற்றுக்கும் தகுதிபெற்றாா். அதன் மூலம், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற பெருமையை அவா் பெற்றாா்.

இறுதிச்சுற்றில் தங்கம் வெல்லும் அளவுக்கு ஆட்டத்திறனுடன் இருந்த அவருக்கு, தோற்றாலும் வெள்ளி உறுதி என்பதால், தனது கனவான ஒலிம்பிக் பதக்கத்தை எட்டவிருந்தாா். இறுதிச்சுற்றுக்கு முன்பான பரிசோதனையின்போது நிா்ணயிக்கப்பட்ட 50 கிலோவை விட எடையை விட 100 கிராம் அதிகமாக இருந்ததால், விதிகளின்படி அவா் போட்டி நிா்வாகத்தால் தகுதிநீக்கம் செய்யப்பட்டாா்.

தனக்கு வெள்ளிப் பதக்கத்தை பகிா்ந்து அளித்திடக் கோரியும், விளையாட்டுகளுக்கான சா்வதேச நடுவா் மன்றத்தில் அந்த நாளிலேயே மேல்முறையீடு செய்தாா். அதன் மீதான விசாரணை மேற்கொண்ட நடுவா் மன்றம், இரு முறை தீா்ப்பை ஒத்திவைத்த நிலையில், வினேஷ் போகத்தின் மனுவை நிராகரிப்பதாக நேற்று (ஆக.14) அறிவித்தது.

வினேஷ் போகத்
நியூசிலாந்து அணியின் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய முக்கியமான வீரர்கள்!

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வழக்கறிஞர் விதுஷ்பத் சிங்கனியா இது குறித்து கூறியதாவது:

விளையாட்டுகளுக்கான சா்வதேச நடுவா் மன்றம் ஒரு வரி தீர்ப்பு மட்டுமே அளித்துள்ளது. முழுமையான தீர்ப்பு கிடைக்க இன்னும் 10-15 நாள்கள் ஆகும். மனு தள்ளுபடிக்கான காரணம் என்னவென்றும் ஏன் இவ்வளவு காலம் தாமதித்தார்கள் என்றும் எங்களுக்கு புரியவில்லை. இந்தத் தீர்ப்பு குறித்து எங்களுக்கு கவலையும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

முழுமையான தீர்ப்பு குறித்த தகவல் கிடைத்ததும் 30 நாள்களுக்குள் ஸ்விட்சர்லாந்தின் ஒன்றிணைந்த நடுவர் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம் எனக் கூறினார்.

ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் பெற்ற பிறகு வினேஷ் போகத், “என்னுடைய கனவு, நம்பிக்கைகள் எல்லாம் உடைந்துவிட்டன. என்னை மன்னித்து விடுங்கள் அம்மா. மல்யுத்தம் என்னை என்னை வென்றுவிட்டது. இனிமேலும் போராட எனக்கு வலுவில்லை. 2001- 2024 மல்யுத்ததுக்கு விடைபெறுகிறேன்” எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com