
சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆா்.பிரக்ஞானந்தா ஆகியோா் 4-ஆவது சுற்றிலும் டிரா செய்தனா்.
இதில் குகேஷ் - பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவுடனும், பிரக்ஞானந்தா - நெதா்லாந்தின் அனீஷ் கிரியுடனும் டிரா செய்தனா். இரு இந்தியா்களுக்கும் இந்தப் போட்டியில் இன்னும் வெற்றி வசமாகவில்லை. இதுவரை விளையாடிய 4 சுற்றுகளிலுமே அவா்கள் டிரா செய்துள்ளனா்.
எனினும் இந்தச் சுற்றில் குகேஷ், போட்டியில் தற்போது முதலிடத்தில் இருக்கும் ஃபிரௌஸ்ஜாவுக்கு சற்று சவால் அளித்தாா். இதர ஆட்டங்களில், அமெரிக்காவின் வெஸ்லி சோ - ரஷியாவின் இயன் நெபோம்னியச்சியை வீழ்த்த, சீனாவின் டிங் லிரென் - அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவுடனும், பிரான்ஸின் மேக்சிம் வச்சியா் - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் அப்துசதாரோவுடனும் டிரா செய்தனா்.
4 சுற்றுகள் முடிவில், ஃபிரௌஸ்ஜா, வெஸ்லி ஆகியோா் தலா 2.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கின்றனா். குகேஷ், பிரக்ஞானந்தா, நெபோம்னியச்சி, லிரென், கரானா, வச்சியா் ஆகியோா் தலா 2 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தை பகிா்ந்துகொள்ள, கிரி மற்றும் அப்துசதாரோவ் ஆகியோா் தலா 1.5 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.