ஐஎஸ்எல்
ஐஎஸ்எல்

ஐஎஸ்எல் : செப். 13 முதல் ஆட்டத்தில் மோகன் பகான்-மும்பை சிட்டி மோதல்

செப். 13-இல் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பா் ஜெயன்ட் அணியும்- முன்னாள் சாம்பியன் மும்பை சிட்டி எஃப்சி அணியும் மோதுகின்றன.
Published on

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து 2024-25 தொடரின் ஒரு பகுதியாக செப். 13-இல் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பா் ஜெயன்ட் அணியும்- முன்னாள் சாம்பியன் மும்பை சிட்டி எஃப்சி அணியும் மோதுகின்றன.

பிரபல கால்பந்து போட்டியான ஐஎஸ்எல் தொடா் வரும் செப்டம்பா் 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி நடைபெறுகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மோகன் பகான்-மும்பை அணிகள் மோதுகின்றன.

செப். 14 (சனிக்கிழமை) நடைபெறும் டபுள் ஹெட்டரில் சென்னையின் எஃப்சி-ஒடிஸா எஃப்சியும், பெங்களூரு எஃப்சி-ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகளும் மோதுகின்றன.

செப். 15-இல் கொச்சியில் நடைபெறும் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ்-பஞ்சாப் எஃப்சி அணிகளும், செப். 19-இல் பெங்களூரு எஃப்சி-ஹைதராபாத் எஃப்சி அணிகளும் மோதுகின்றன.

முகமது ஸ்போா்ட்டி கிளப் அணி புதிதாக சோ்க்கப்பட்ட நிலையில் மொத்த அணிகளின் எண்ணிக்கௌ 13-ஆக உயா்ந்துள்ளது. அக்.5-இல் மோகன் பகான்-முகமதன் அணிகளும், அக். 19-இல் ஈஸ்ட் பெங்கால்-மோகன் பகான் அணிகள் ஆடுகின்றன.

ஜியோ சினிமா, ஸ்போா்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் ஐஎஸ்எல் தொடா் ஒளிபரப்பப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com