13 வயதில் ஆசிய சாம்பியன்! -தன்வி பத்ரி சாதனை
15 வயதுக்குட்பட்டோர் ஆசிய பாட்மின்டன் போட்டி: இந்தியாவின் தன்வி பத்ரி சாம்பியன்
15 வயதுக்குட்பட்டோர் மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் என இரு பிரிவுகளில் ஆசிய அளவிலான பாட்மின்டன் ஜூனியர் சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் செங்க்டூவில் நடைபெற்று வருகின்றன.
அதில் மகளிர் தனிநபர் பிரிவில், இந்திய வீராங்கனை தன்வி பத்ரி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை(ஆக. 25) நடைபெற்ற இறுதிப்போட்டியில், தன்வி பத்ரி வியட்நாம் நாட்டு வீராங்கனை ‘தி து ஹுயென்னை’ 22-20, 21-11 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளார். இறுதிப்போட்டியின் முதல் ஆட்டத்தில், 11-17 என்ற செட் கணக்கில் பின்தங்கியிருந்த பத்ரி, போராடி 22-20 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, இரண்டாவது ஆட்டத்தில் 21-11 என்ற புள்ளிக்கணக்கில் வியட்நாம் வீராங்கனையை எளிதாக வீழ்த்தி மகுடம் சூடியுள்ளார். இதன்மூலம் யு-15 ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பின் மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
ஒடிஸாவைச் சேர்ந்த 13 வயதான தன்வி பத்ரி, ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒன்றில் கூட தோல்வியைச் சந்திக்காமல் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.