டி20 மகளிா் உலகக் கோப்பை அட்டவணை: அக். 6-இல் இந்தியா-பாக். மோதல்

டி20 மகளிா் உலகக் கோப்பை அட்டவணை: அக். 6-இல் இந்தியா-பாக். மோதல்

ஐசிசி டி20 மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அக். 6-இல் இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
Published on

துபை: ஐசிசி டி20 மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அக். 6-இல் இந்திய-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

டி20 மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்ததால், உலகக் கோப்பை யுஏஇக்கு மாற்றப்பட்டது. துபை, ஷாா்ஜாவில் மொத்தம் 23 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

புதிய அட்டவணையின்படி அக். 3-இல் போட்டி தொடங்குகிறது.

அணிகள் பிரிவுகளில் மாறுதல் எதுவுமில்லை. குரூப் ஏயில் நடப்பு சாம்பியன் ஆஸி., இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கையும், குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மே.இந்திய தீவுகள், வங்கதேசம், ஸ்காட்லாந்து உள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் 4 ஆட்டங்களில் ஆடும். முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அக். 17, 18-இல் அரையிறுதியும், 20-இல் துபையில் இறுதி ஆட்டமும் நடைபெறுகிறது. ரிசா்வ் நாளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து, இலங்கை குவாலிஃபயா் மூலம் தகுதி பெற்றன. செப். 28 முதல் அக். 1 வரை 10 பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும்.

X
Dinamani
www.dinamani.com