கேல் ரத்னா விருது சர்ச்சை: மௌனம் கலைத்த மனு பாக்கர்!

கேல் ரத்னா விருது சர்ச்சை குறித்து மனு பாக்கர் விளக்கம் அளித்துள்ளார்.
மனு பாக்கர்
மனு பாக்கர்படங்கள்: எக்ஸ் / மனு பாக்கர்
Published on
Updated on
1 min read

’கேல் ரத்னா விருதுக்கு நான் தகுதியானவள். ஆனால், அதை நாடு பார்த்துக்கொள்ளும்’ என மனு பாக்கர் கூறியதாக அவரது தந்தை ராம் கிஷன் கூறியுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற ஒலிம்பிக் நாயகி மனு பாக்கரின் பெயர் இந்தாண்டுக்கான கேல் ரத்னா விருதுப் பட்டியலில் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டுதோறும் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டின் உயரிய கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது.

ஒரே ஒலிம்பிக்கில் இரு பதக்கங்களை வென்ற இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்த மனு பாக்கர் சமீபத்தில் தான் கேல் ரத்னா விருதுக்கு தகுதியானவரா என்று சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி பின்னர் அந்தப் பதிவை நீக்கினார்.

22 வயதாகும் மனு பாக்கர் இதற்கு முன்பு பல விருதுகளுக்கு விண்ணப்பித்தும் கிடைக்கவில்ல என அவரது குடும்பத்தினர் பேசியிருப்பது சர்ச்சையைக் கூட்டியுள்ளது.

இந்த நிலையில் அவரது பெயர் கேல் ரத்னா விருதுப் பட்டியலில் இல்லை என்று சமூக வலைதளங்களில் பேசுப்பொருளானதைத் தொடர்ந்து மௌனம் கலைத்துள்ளார் மனு பாக்கர்.

தனது எக்ஸ் பக்கத்தில் மனு பாக்கர் கூறியதாவது:

சமீபத்திய கேல் ரத்னா விருது குறித்து நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் விளையாட்டு வீராங்கனையாக எனது பங்கு நாட்டுக்காக விளையாடுவது மட்டுமே. விருதுகள், மரியாதைகள் எனக்கு ஊக்கம் அளித்தாலும் அவை எனது நோக்கம் கிடையாது.

விருதுக்கு விண்ணப்பிக்கும்போது என் தரப்பில் தவறு நடந்திருக்கலாம் என்று நம்புகிறேன், அது சரி செய்யப்பட்டு வருகிறது.

இந்த விருதுகளைவிட எனக்கு நாட்டுக்காக பல பதக்கங்களை வெல்வதே எனக்கு ஊக்கம் தருகிறது.

இந்த விஷயத்தை பெரிதாக்காதீர்கள் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com