
பிரபல செஸ் வீரர் மாக்னஸ் கார்ல்சென் தற்காலிக தடைக்குப் பிறகு மீண்டும் ஜீன்ஸ் அணிந்துகொண்டு போட்டியில் பங்கேற்றார்.
5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மாக்னஸ் கார்ல்சென் ஜீன்ஸ் அணிந்து உலக ரேபிட் அன்ட் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு வந்ததால் போட்டியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாக கார்ல்செனுக்கு முதல்முறையாக 200 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.17,076) அபராதம் விதிக்கப்பட்டது.
பின்னர் ஃபிடே உடன் கார்ல்சென் சமாதனாம் ஆகி இன்றைய போட்டியில் பங்கேற்றார்.
இன்றைய போட்டிக்கும் கார்ல்சென் ஒரு நிமிடம் தாமதமாக வந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் ரவுண்டில் 52 வயதான ஜெர்மன் கிராண்ட்மாஸ்டர் மைக்கல் பெஜாய்ட் உடன் மோதினார். ஒரு நிமிடம் கழித்து தாமதமாக தனது முதல் நகர்வை நகத்தினார். பின்னர் 49 நொடிகள் மீதமிருக்கும் நேரத்தில் போட்டியில் வென்று அசத்தினார்.
இது குறித்து கார்ல்சென், “மீண்டும் ஜீன்ஸ் உடன் விளையாடியது மகிழ்ச்சி. இன்றுதான் புதிய ஜீன்ஸ் வாங்கியதால் சற்று தாமதமாகிவிட்டது. ஆனால், சரியாக வரவேண்டியது என்னுடைய கடமைதான்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.