
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக, பிசிசிஐ செயலா் ஜெய் ஷா தொடா்ந்து 3-ஆவது முறையாக புதன்கிழமை நியமிக்கப்பட்டாா்.
பாலியில் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டு பொது கூட்டத்தில் ஜெய் ஷா தலைவா் பதவியில் நீடிப்பதற்கு, இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவா் ஷம்மி சில்வா முன்மொழிய, கவுன்சிலின் இதர உறுப்பினா்கள் அதை வழிமொழிந்தனா்.
கடந்த 2021 ஜனவரியில் வங்கதேசத்தின் நஸ்முல் ஹசன் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான ஜெய் ஷா, தனது பதவிக் காலத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளை (2022, 2023) வெற்றிகரமாக நடத்தியிருக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.