இளம் வீரர்களிடம் பொறுமை காக்க வேண்டும்: இந்திய பேட்டிங் பயிற்சியாளர்

இந்திய அணியின் இளம் ஆட்டக்காரர்களிடம் சிறிது பொறுமையாக இருக்க வேண்டும் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். 
இளம் வீரர்களிடம் பொறுமை காக்க வேண்டும்: இந்திய பேட்டிங் பயிற்சியாளர்

இந்திய அணியின் இளம் ஆட்டக்காரர்களிடம் சிறிது பொறுமையாக இருக்க வேண்டும் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இளம் வீரர்களான ஷுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்றோர் பெரிய அளவில் ரன்கள்  சேர்க்கத் தவறினர். முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்த ஜெய்ஸ்வால் இரண்டாவது இன்னிங்ஸில் ரன்கள் குவிக்கத் தவறினார். 

இந்த நிலையில், இந்திய அணியின் இளம் ஆட்டக்காரர்களிடம் சிறிது பொறுமையாக இருக்க வேண்டும் என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்கள் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதில்லை. அதனால், அவர்களிடம் நாம் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் சிறிது பொறுமை காக்க வேண்டும். ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் விரைவில் பெரிய அளவில் ரன்கள் குவிப்பார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்றவாறு இளம் வீரர்கள் விளையாட வேண்டும். ரன்கள் குவிக்க வாய்ப்பு கிடைக்கும்போது அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (பிப்ரவரி 2) விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com