வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

3-வது இடத்தில் களமிறங்கி ரன் குவிப்பது மகிழ்ச்சியளிக்கிறது: ஷுப்மன் கில்

மூன்றாவது இடத்தில் களமிறங்குவது முக்கியமானதாகவும், திருப்திகரமானதாகவும் இருப்பதாக இந்திய அணியின் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :4 பிப்ரவரி 2024, 4:09 pm

DIN

மூன்றாவது இடத்தில் களமிறங்குவது முக்கியமானதாகவும், திருப்திகரமானதாகவும் இருப்பதாக இந்திய அணியின் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கு 399 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் ஷுப்மன் கில் நீண்ட நாட்களுக்குப் பிறகு சதம் அடித்து அசத்தினார். அவர் 104 ரன்கள் குவித்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். 

இந்த நிலையில், மூன்றாவது இடத்தில் களமிறங்குவது முக்கியமானதாகவும், திருப்திகரமானதாகவும் இருப்பதாக இந்திய அணியின் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த சதம் எனக்கு மிகவும் முக்கியமானது. இந்த சதம் எனக்கு முக்கியமானதாகவும், திருப்திகரமானதாகவும்  அமைந்துள்ளது. 3-வது இடத்தில் களமிறங்கி ரன்கள் குவிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக, தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பிறகு, அணிக்காக நிதானமாக விளையாடி ரன்கள் குவிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் கொடுக்கும் சிறப்பான தொடக்கம், மூன்றாவது இடத்தில் நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவுகிறது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.