ஐபிஎல் 2024 முழுவதும் ரிஷப் பந்த் விளையாடுவார்; ஆனால்... : ரிக்கி பாண்டிங் அதிரடி!

2024ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் விளையாடுவாரென பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 
கோப்புப் படங்கள்
கோப்புப் படங்கள்

கார் விபத்தில் சிக்கியவுடன் இந்த உலகத்தில் தனக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், இறந்துவிடுவேன் என நினைத்ததாகவும் இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

26 வயதான ரிஷப் பந்த் தனது அதிரடி பேட்டிங்கினால் பெயர்போனவர். தில்லி அணியின் கேப்டனும் கீப்பருமான அவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் பந்த் பயங்கர கார் விபத்தில் சிக்கினார். அதில் பலத்த காயங்களுடன் உயிர்பிழைத்த ரிஷப் பந்த் தற்போது குணமடைந்து கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தில்லி கேப்பிடல்ஸ் அணியை அவர் வழிநத்துவார் எனவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் தில்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியதாவது: 

இந்த ஐபிஎல் தொடரில் விளையாட ரிஷப் பந்த் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். ஆனால் எந்த அளவில் விளையாடுவார் எனக் கூறமுடியாது. 2024 ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாட ஆயத்தமாக இருக்கிறார். முதல் ஐபிஎல் போட்டிக்கு இன்னும் 6 வாரங்கள் இருப்பதால் ரிஷப் பந்த், கீப்பராகவும் கேப்டனாகவும் செயல்படுவாரா என உறுதியாக கூற முடியாது. 

நான் ரிஷப் பந்த்திடம் கேட்டபோது, “அனைத்து போட்டிகளிலும் விளையாடுகிறேன். கீப்பிங்கும் செய்து நம்.4இல் களமிறங்குவேன்” எனக் கூறியுள்ளார். முடிந்தால் 14இல் 10 போட்டியாவது விளையாட வைப்போம். மீதியெல்லாம் கூடுதல் அதிர்ஷ்டம்தான். ரிஷப் கேப்டனாக இல்லாவிட்டால் வார்னர் கேப்டனாக செயல்படுவார் என்றும் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com