யார்க்கர்களின் அரசன் பும்ரா: ஐசிசி வெளியிட்ட விடியோ! 

பிரபல இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் யார்க்கர்கள் அடங்கிய விடியோவை வெளியிட்டு ஐசிசி, வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. 
யார்க்கர்களின் அரசன் பும்ரா: ஐசிசி வெளியிட்ட விடியோ! 

ஐசிசி டெஸ்ட் பௌலர் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா. இதற்கு முன்பாக பும்ராவின் அதிகபட்ச ஐசிசி தரவரிசை 3வது இடம்.  

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்து வீசி 9 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். இதன்மூலம் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஒரு இந்திய வேகப் பந்து வீச்சாளர் டெஸ்ட்டில் முதலிடம் பிடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைத்து வடிவிலான கிரிக்கெடிலும் முதலிடம் பிடித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார். 

பிரபல இந்திய வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் யார்க்கர்கள் அடங்கிய விடியோவை வெளியிட்டு ஐசிசி, வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. 

இந்த விடியோவில் யார்க்கர் கிங் எனக் குறிப்பிட்டு டெஸ்ட்டில் நம்.1 இடம் பிடித்துள்ள பும்ராவுக்கு வாழ்த்துகள் என ஐசிசி தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com