டி20 உலகக் கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்வதில் ஐபிஎல் தாக்கத்தை ஏற்படுத்தும்: பிரபல பயிற்சியாளர்

ஐபிஎல் மற்றும் சர்வதேச லீக் டி20 தொடரில் வீரர்கள் செயல்படும் விதம் உலகக் கோப்பை டி20 தொடருக்கான அணியைத் தேர்வு செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்துமென பிரபல பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார். 
டி20 உலகக் கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்வதில் ஐபிஎல் தாக்கத்தை ஏற்படுத்தும்: பிரபல பயிற்சியாளர்

ஐபிஎல் மற்றும் சர்வதேச லீக் டி20 தொடரில் வீரர்கள் செயல்படும் விதம் உலகக் கோப்பை டி20 தொடருக்கான அணியைத் தேர்வு செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்துமென பிரபல பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் டி20 உலகக் கோப்பை அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் மற்றும் சர்வதேச லீக் டி20 தொடர்களில் விளையாடியிருப்பார்கள். இந்த நிலையில், ஐபிஎல் மற்றும் சர்வதேச லீக் டி20 தொடரில் வீரர்கள் செயல்படும் விதம் உலகக் கோப்பை டி20 தொடருக்கான அணியைத் தேர்வு செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்துமென பிரபல பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடர் மார்ச் - மே மாத இடைவெளியில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் போலவே சர்வதேச லீக் டி20 தொடரும் மிக முக்கியமானத் தொடராகும். இந்த இரண்டு தொடர்களிலும் சிறப்பாக விளையாடும் வீரர்களை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் உன்னிப்பாக கவனிக்கும். உலகக் கோப்பைக்கு முன்னர் இந்த டி20 தொடர்கள் நடைபெறுவதால் உலகக் கோப்பை டி20 தொடருக்கான அணியைத் தேர்வு செய்வதில் இந்தத் தொடர்கள் தாக்கத்தை ஏற்படுத்தும். உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தத் தொடர்களில் சிறப்பாக விளையாடுவது வீரர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்றார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் இதே கருத்தை அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com