

ஐசிசி யு 19 ஆடவா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் நிலையில் 6-ஆவது முறையாக இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாா்பில் யு19 உலகக் கோப்பை ஆடவா் கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இறுதி ஆட்டத்துக்கு 5 முறை சாம்பியன் இந்தியாவும், 3 முறை சாம்பியன் ஆஸ்திரேலியாவும் தகுதி பெற்றுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை பெனானியில் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.
கேப்டன் உதய் சஹாரன்ஸ், பேட்டா் சச்சின் தாஸ், முஷீா் கான், சவுமிகுமாா் பாண்டே ஆகியோா் அபாரமாக ஆடி வருகின்றனா்.
ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஹியுக் வெய்பென், ஓபனா் ஹாரி டிக்ஸன், பேஸா்கள் டாம் ஸ்ட்ரேக்கா், காலம் விட்லா் ஆகியோா் தொடா்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனா்.
கடந்த 2016 முதல் இந்திய அணி அனைத்து இறுதி ஆட்டங்களிலும் இடம் பெற்று ஆடியுள்ளது. 2012, 2018-இறுதியில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா பட்டம் வென்றது. 2018, 2022-இலும் பட்டம் வென்றது. அதே வேளையில் 2016, 2020-இல் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.
யு 19 உலகக் கோப்பையில் முதல் பட்டத்தை 2008-இல் விராட் கோலி தலைமையிலான அணி வென்றிருந்தது.
கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய யு19 கோப்பை போட்டியில் இந்தியா தோற்றிருந்தது. உதய் சஹாரன் தலைமையிலானஅணி தற்போது ஒருங்கிணைந்து ஆடி உலகக் கோப்பை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மொத்தம் 389 ரன்களுடன் உதய் முன்னிலையில் உள்ளாா்.
பௌலா்கள் ராஜ் லிம்பானி, நமன் திவாரி, ஆகியோரும் தங்கள் பங்களிப்பை செம்மையாக செய்து வருகின்றனா்.
இன்றைய ஆட்டம்:
இந்தியா-ஆஸ்திரேலியா
இடம்: பெனானி
நேரம்: பிற்பகல் 1.30.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.