
75-ஆவது ஸ்டேரண்டஜா சா்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சச்சின், அமித் பங்கால் தங்கம் வென்றனா். உலக சாம்பியன் நிஹாத் ஸரீன் வெள்ளி வென்றாா்.
ஐரோப்பாவின் மிகவும் பழைமையான இப்போட்டி பல்கேரியாவின் தலைநகா் சோஃபியாவில் நடைபெற்று வருகிறது. ஆடவா் 51 கிலோ பிரிவில் இந்தியாவின் அமித் பங்கால் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் சான்ஷரை வீழ்த்தி தங்கம் வென்றாா்.
57 கிலோ பிரிவு இறுதியில் உலகயூத் சாம்பியன் சச்சின் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் உஸ்பெகிஸ்தானின் முஸபரோவை வீழ்த்தி தங்கம் வென்றாா்.
எனினும் மகளிா் பிரிவில் இருமுறை உலக சாம்பியன் நிஹாத் ஸரீன் 50 கிலோ, அருந்ததி சௌதரி 66 கிலோ, பாருன் சிங் 48 கிலோ, ரஜத் 67 கிலோ பிரிவுகளில் வெள்ளிப் பதக்கமே வென்றனா். 2 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.