92 ஆண்டு கால வரலாற்று சாதனை: டெஸ்ட் தொடரை வென்ற நியூசிலாந்து!

டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி முதன்முறையாக தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
92 ஆண்டு கால வரலாற்று சாதனை: டெஸ்ட் தொடரை வென்ற நியூசிலாந்து!

டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணி முதன்முறையாக தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.

தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி தற்போது முடிந்தது.

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தனது முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் முறையே 242 ரன்கள் மற்றும் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணிக்கு 267 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேன் வில்லியம்சன் 133, வில் யங் 60 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வித்திட்டனர்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து 281 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது. 2-0 என தொடரை முழுமையாக கைப்பற்றியது நியூசிலாந்து.

தென்னாப்பிரிக்காவை 92 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி முதன்முறையாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com