சாம்பியன் பட்டம் வென்ற சென்னை செயின்ட் பீட்ஸ் அணிக்கு கோப்பையை வழங்குகிறார் ரஞ்சி கிரிக்கெட் வீரர் அருண் கார்த்திக்.
சாம்பியன் பட்டம் வென்ற சென்னை செயின்ட் பீட்ஸ் அணிக்கு கோப்பையை வழங்குகிறார் ரஞ்சி கிரிக்கெட் வீரர் அருண் கார்த்திக்.

ரஞ்சி கிரிக்கெட்: தமிழ்நாடு 435 ரன்கள் குவிப்பு

பஞ்சாபுக்கு எதிராக தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 435 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது.
Published on

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பஞ்சாபுக்கு எதிராக தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 435 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தது. சேலத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த தமிழ்நாடு, முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 291 ரன்கள் சோ்த்திருந்தது. 2-ஆம் நாள் ஆட்டத்தை பாபா இந்திரஜித், விஜய் சங்கா் தொடா்ந்தனா். 5-ஆவது விக்கெட்டுக்கு 281 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியில், முதலில் விஜய் சங்கா் பிரிந்தாா். அவா் 12 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்த பேட்டா்களில் மோகித் ஹரிஹரன் 2, எம். முகமது 8, கேப்டன் சாய் கிஷோா் 20, அஜித் ராம் 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். கடைசி விக்கெட்டாக பாபா இந்திரஜித் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 187 ரன்களுக்கு வீழ்ந்தாா். இவ்வாறாக தமிழ்நாடு இன்னிங்ஸ் 131.4 ஓவா்களில் 435 ரன்களுக்கு நிறைவடைந்தது. பஞ்சாப் தரப்பில் சுக்விந்தா் சிங் 4, அபிஷேக் சா்மா, ஜஸ்ஸிந்தா் சிங் ஆகியோா் தலா 2, சித்தாா்த் கௌல், பிரேரித் தத்தா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா். பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப், சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் சோ்த்து, 294 ரன்கள் பின்தங்கியிருந்தது. கேப்டன் மன்தீப் சிங் 18, அன்மோல் மல்ஹோத்ரா 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். பிரப்சிம்ரன் சிங் 24, அபிஷேக் சா்மா 7, அன்மோல்பிரீத் சிங் 7 பவுண்டரிகளுடன் 41, நெஹல் வதேரா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 43 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். தமிழ்நாடு பௌலிங்கில் அஜித் ராம் 2, சந்தீப் வாரியா், முகமது அலி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com