சிக்ஸர்கள் அடிப்பதில் சாதனை படைத்த இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிக்ஸர்கள் அடிப்பதில் சாதனை படைத்துள்ளது.
சிக்ஸர்கள் அடிப்பதில் சாதனை படைத்த இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிக்ஸர்கள் அடிப்பதில் சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன.

சிக்ஸர்கள் அடிப்பதில் சாதனை படைத்த இந்திய அணி!
ஜெய்ஸ்வால் இரட்டை சதம்! இங்கிலாந்துக்கு 557 ரன்கள் இலக்கு!

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது சிக்ஸர்கள் அடிப்பதில் இந்திய அணியால் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.

அந்த சாதனைகள் பின்வருமாறு:

ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸ்ர்கள் அடித்த அணிகள்

48* சிக்ஸர்கள் - இந்தியா vs இங்கிலாந்து, 2024 (3* போட்டிகள்)

47 சிக்ஸர்கள் - இந்தியா vs தென்னாப்பிரிக்கா, 2019 (3 போட்டிகள்)

43 சிக்ஸர்கள் - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, 2023 (5 போட்டிகள்)

40 சிக்ஸர்கள் - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, 2013-14 (5 போட்டிகள்)

ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய அணி அடித்த அதிக சிக்ஸர்கள்

48* சிக்ஸர்கள் - இந்தியா vs இங்கிலாந்து, 2024 - (3* போட்டிகள்)

47 சிக்ஸர்கள் - இந்தியா vs தென்னாப்பிரிக்கா, 2019 - (3 போட்டிகள்)

32 சிக்ஸர்கள் - இந்தியா vs ஆஸ்திரேலியா, 2023 - (4 போட்டிகள்)

31 சிக்ஸர்கள் - இந்தியா vs இங்கிலாந்து, 2016 - (5 போட்டிகள்)

ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடித்த அதிக சிக்ஸர்கள்

28* சிக்ஸர்கள் - இங்கிலாந்துக்கு எதிராக, 2024

27 சிக்ஸர்கள் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2019

18 சிக்ஸர்கள் - நியூசிலாந்துக்கு எதிராக, 2021

15 சிக்ஸர்கள் - இலங்கைக்கு எதிராக, 2009

ஒரு இன்னிங்ஸில் இந்திய அணி அடித்த அதிக சிக்ஸர்கள்

18 சிக்ஸர்கள் - இங்கிலாந்துக்கு எதிராக, 2024

15 சிக்ஸர்கள் - இலங்கைக்கு எதிராக, 2009

14 சிக்ஸர்கள் - தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக, 2019

13 சிக்ஸர்கள் - தென்னப்பிரிக்காவுக்கு எதிராக, 2019.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com