நியூசிலாந்து அணியை தடை செய்யுங்கள்: ரசிகரின் வேண்டுகோளுக்கு காரணம் என்ன?

நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் நீல் வாக்னர் ஓய்வை அறிவிக்கும்போது கண்ணீருடன் பேசிய விடியோ வைரலாகி வருகிறது.
கண்ணீருடன் ஓய்வை அறிவித்த நீல் வாக்னர்.
கண்ணீருடன் ஓய்வை அறிவித்த நீல் வாக்னர். படங்கள்: ஐசிசி, எக்ஸ்

நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சாளர் நீல் வாக்னர் ஓய்வை அறிவிக்கும்போது கண்ணீருடன் பேசிய விடியோ வைரலாகி வருகிறது.

நியூசிலாந்து அணியின் பிரபல வேகப் பந்து வீச்சாளர் நீல் வாக்னர் தனது 37வது வயதில் ஓய்வை அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் பிறந்த நீல் வாக்னர், நியூசிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி 260 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

2012ஆம் ஆண்டு தனது முதல் டெஸ்ட் போட்டியை தொடங்கிய நீல் வாக்னர் 2021இல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வதற்கு முக்கியப் பங்காற்றினார். 2008இல் தென்னாப்பிரிக்காவில் இருந்து நியூசிலாந்துக்கு குடியேறிய இவர் விளையாடிய 64 போட்டிகளில் நியூசி. 34 வென்றிருக்கிறது.

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களில் 2வது அதிகபட்ச பௌலிங் ஸ்டிரைக் ரேட் (52.7) கொண்டவரும் இவர்தான். ரிச்சர்ட் ஹாட்லி 50.8 சதவிகிதத்துடன் முதலிடத்தில் இருக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் கால் கட்டை விரலில் காயமடைந்தப் பிறகும், மீண்டும் போட்டியில் வந்து விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

கண்ணீருடன் ஓய்வை அறிவித்த நீல் வாக்னர்.
3வது குழந்தைக்கு தந்தையான கேன் வில்லியம்சன்!

ஓய்வை அறிவிக்கும்போது அழுதுகொண்டே பேசினார். அதில், “உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றிலிருந்து விலகுவது எளிதானதில்லை. ஆனால் அணியை முன்னகர்த்தி செல்ல மற்றவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க நான் விலகியாக வேண்டும். நியூசிலாந்து அணிக்காக விளையாடிய ஒவ்வொரு டெஸ்ட் போட்டியும் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். ஒரு அணியாக நாங்கள் சாதித்த அனைத்துக்கும் பெருமைக் கொள்கிறோம்” எனக் கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக சிறப்பாக பந்து வீசியதை மக்கள் கமெண்டுகளில் தெரிவித்து வருகிறார்கள். மிகவும் குறைவான மதிப்பிடப்பட்ட நல்ல வீரர் எனவும் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதில் ஒரு ரசிகர், “இந்த நியூசிலாந்து அணியை தடை செய்ய வேண்டும். ஏனெனில் நம்மை மிகவும் உணர்ச்சிவயப்படுத்துகிறார்கள். மிஸ் யூ நீல் வாக்னர்” என கமெண்டு செய்துள்ளார்.

கிரிக்கெட் உலகில் நியூசிலாந்து அணி மீது ரசிகர்களுக்கு அதிகம் நன்மதிப்பு உண்டு. 2019 ஒருநாள் உலகக் கோபையும் நியூசிலாந்து வெல்ல வேண்டியது. போட்டி ட்ரா ஆனதும் அதிக சிக்ஸர்கள் முறையில் இங்கிலாந்து வென்றது. அப்போது ஜிம்மி நீஷம் பதிவிட்ட பதிவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com