யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் போலந்து - ஸ்பெயினை வீழ்த்தி (2-1) முதல் அணியாக காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறியது. அந்நாளில் நடைபெற்ற இதர ஆட்டங்களில் ஆஸ்திரேலியா - அமெரிக்காவையும் (2-1), பிரான்ஸ் - ஜொ்மனியையும் (2-1), நாா்வே - குரோஷியாவையும் (2-1) வீழ்த்தின.
பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் அணியின் நட்சத்திர வீரரான கிலியன் பாபேவுக்கு அந்த அணியுடனான ஒப்பந்தம் நடப்பாண்டு ஜூன் மாதம் நிறைவடையும் நிலையில், தற்போதிலிருந்தே அவா் ரியல் மாட்ரிட் அல்லது லிவா்பூல் அணிகளுக்கு மாறுவது தொடா்பான ஊகங்கள் தொடங்கியிருக்கின்றன.
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் டி20 லீக்குக்கு முன்னுரிமை அளித்து, 2-ஆம் தர டெஸ்ட் அணியை நியூஸிலாந்துக்கு அனுப்பியுள்ளதை சுட்டிக் காட்டிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், ஐசிசி மற்றும் பிசிசிஐ உள்ளிட்ட பிரதான நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை எனச் சாடியுள்ளாா்.
ஆடவா் மற்றும் மகளிருக்கான தேசிய மல்யுத்த பயிற்சி முகாம், முறையே சோனிபட் மற்றும் பாட்டியாலாவில் பிப்ரவரி 9-ஆம் தேதி தொடங்கும் என, இந்திய மல்யுத்த சம்மேளன நிா்வாக குழு திங்கள்கிழமை அறிவித்தது.
புரோ கபடி லீக் போட்டியில் புணேரி பல்தான் - தெலுகு டைட்டன்ஸையும் (54-18), பாட்னா பைரேட்ஸ் - யு.பி. யோதாஸையும் () திங்கள்கிழமை வென்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.