இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 1) அறிவித்துள்ளது.
ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த நிலையில், இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டிகள்
ஜனவரி 6 - முதல் ஒருநாள் போட்டி
ஜனவரி 8 - இரண்டாவது ஒருநாள் போட்டி
ஜனவரி 11 - மூன்றாவது ஒருநாள் போட்டி
இரு அணிகளுக்கும் இடையிலான டி20 போட்டிகள்
ஜனவரி 14 - முதல் டி20 போட்டி
ஜனவரி 16 - இரண்டாவது டி20 போட்டி
ஜனவரி 18 - மூன்றாவது டி20 போட்டி