பஞ்சாப் கிங்ஸுக்கு புதிய ‘ஹோம் கிரவுண்ட்’?

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ‘ஹோம் கிரவுண்ட்’ மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸுக்கு புதிய ‘ஹோம் கிரவுண்ட்’?

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ‘ஹோம் கிரவுண்ட்’ மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், தில்லி கேபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த தொடரில் ஆண்டுதோறும் ஒவ்வொரு அணியும் 18 லீக் போட்டிகளை எதிர்கொள்ளும். இதில், 9 போட்டிகள் சொந்த மைதானத்திலும், 9 போட்டிகள் எதிரணிகளின் மைதானத்திலும் விளையாடும்.

சென்னை அணிக்கு சேப்பாக்கம், மும்பைக்கு வான்கடே போன்று பஞ்சாப் அணிக்கு மொஹாலி மைதானம் சொந்த மைதானமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், வருகின்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் சொந்த மைதானமாக முல்லான்பூர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் உள்ள மகாராஜா யத்விந்தர் சிங் சர்வதேச மைதானம் ரூ.230 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்தினர் சமீபத்தில் பார்வையிட்டு சென்றனர்.

மொஹாலியில் உள்ள இந்திரஜித் சிங் மைதானத்தைவிட முல்லான்பூர் மைதானம் அதிக இருக்கைகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com