
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இணைவதற்கான சிட்னி செல்லும் விமானத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குநர் முகமது ஹபீஸ் தவறவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்த நிலையில், மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டி நாளை மறுநாள் (ஜனவரி 3) நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இணைவதற்காக அவரது மனைவியுடன் விமானம் நிலையம் வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய இயக்குநர் முகமது ஹபீஸ் சிட்னி செல்லும் விமானத்தை தவறவிட்டார்.
இதையும் படிக்க: இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
விமான நிலையத்துக்கு தாமதமாக வந்தததால் முகமது ஹபீஸ் மற்றும் அவரது மனைவிக்கு சிட்னி செல்லும் விமானத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, சில மணிநேரங்கள் காத்திருப்புக்குப் பிறகு சிட்னி செல்லும் அடுத்த விமானத்தில் அவர்கள் புறப்பட்டனர்.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்து தொடரைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.