டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வேண்டும்: முன்னாள் இந்திய கேப்டன்

உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடம்பெற வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாட வேண்டும்: முன்னாள் இந்திய கேப்டன்

உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடம்பெற வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி நேற்று (ஜனவரி 5) வெளியிட்டது. இந்த நிலையில், உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இடம்பெற வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் பேசியதாவது: இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் மட்டுமின்றி, மிகச் சிறந்த ஃபீல்டர்கள். அவர்கள் இன்னும் இந்திய அணியின் மிகச் சிறந்த ஃபீல்டர்களாக உள்ளனர். அதேபோல இளம் வீரர்களுக்கு மூத்த வீரர்களான இவர்கள் இருவரும் அணியில் இருப்பது மிகவும் உதவியாக இருக்கும்.

35-36 வயதாகும்போது சில நேரங்களில் ஃபீல்டிங்கில் நீங்கள் பந்தை எடுத்து வீசும்  விதம் (த்ரோ) சிறப்பானதாக இல்லாமல் போகலாம். உங்களை எங்கு ஃபீல்டிங் நிற்க வைப்பது என்ற யோசனை வரலாம். ஆனால், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா விஷயத்தில் அவர்களது ஃபீல்டிங் திறன் குறித்து கவலைப்படவே தேவையில்லை. அவர்கள் பயங்கரமான ஃபீல்டர்கள் என்றார். 

உலகக் கோப்பை டி20 போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் வருகிற ஜூன் 1 முதல் தொடங்கி ஜூன் 29 வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com