கடைசி டி20: ஆஸ்திரேலிய மகளிரணிக்கு 148 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலிய மகளிரணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்துள்ளது.
கடைசி டி20: ஆஸ்திரேலிய மகளிரணிக்கு 148 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலிய மகளிரணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நவி  மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய இந்திய அணி முதலில் பேட் செய்தது.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 34 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஜியார்ஜியா வரேஹம் மற்றும் அனபெல் சதர்லேண்ட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அஸ்லெய் கார்டனர் மற்றும் மேஹன் ஷுட் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com