நம்பர் 8-லிருந்து தொடக்க வீரர்: ஸ்டீவ் ஸ்மித்தின் அபார வளர்ச்சி!

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்க உள்ளார். 
நம்பர் 8-லிருந்து தொடக்க வீரர்: ஸ்டீவ் ஸ்மித்தின் அபார வளர்ச்சி!

2010இல் டெஸ்டில் சுழல் பந்து வீச்சாளராக அறிமுகமானவர் ஸ்டீவ் ஸ்மித். பின்னர் தனது அபாரமான பேட்டிங் திறமையினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர் என்ற நிலையை அடைந்துள்ளார். 

105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித் 9,514 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 இரட்டை சதங்கள், 32 சதங்கள், 40 அரைசதங்கள் அடங்கும். சராசரி 58.01 என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. விரைவில் டெஸ்டில் 10 ஆயிரம் ரன்களை தொட இருக்கிறார். 

பேட்டிங் வரிசையில் நம்பர் 8-லிருந்து தொடக்க வீரராக களமிறங்கும் என்பது மிகப் பெரிய சாதனை. ஸ்மித் அதனை தனது திறமையின் மூலம் அடைந்திருக்கிறார். தலைசிறந்த டெஸ்ட் பேட்டர்கள் வரிசையில் ஸ்மித் நிலைத்திருப்பார் என்பது பல கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்து. 

இந்நிலையில் டெஸ்டில் தொடக்க வீரராக ஸ்மித் களமிறங்க உள்ளார். டேவிட் வார்னர் ஓய்வு பெற்றப் பிறகு அந்த இடம் காலியாக இருப்பதால் அதனை ஸ்மித் நிரப்புகிறார். 

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் கேப்டனாக செயல்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2018க்கு முன்பு கேப்டனாக இருந்த ஸ்மித் பந்தினை சேதப்படுத்திய விவகாரத்துக்குப் பின் 2 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. பின்னர் சில போட்டிகளில் மட்டுமே கேப்டனாக பதவி வகித்தார். 

இப்போதுதான் முழுமையான தொடருக்கும் கேப்டனாக செயல்பட உள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com