டி20 உலகக் கோப்பையை வெல்ல இவர்கள் அணியில் வேண்டும்: சுரேஷ் ரெய்னா

டி20  உலகக் கோப்பை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்றுள்ளது சிறப்பான முடிவு.
கோப்புப்படம்
கோப்புப்படம்

டி20  உலகக் கோப்பை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்றுள்ளது சிறப்பான முடிவு என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

14 மாத இடைவெளிக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணியுடன் இணைந்துள்ளனர். 

இந்த நிலையில், டி20  உலகக் கோப்பை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்றுள்ளது சிறப்பான முடிவு என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பை நடைபெறும் இடங்களான அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஆடுகளங்களின் தன்மை புரிந்து கொள்வதற்கு சிறிது கடினமாக இருக்கும். இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் அனுபவம் தேவைப்படுகிறது. விராட் கோலி டி20 போட்டிகளில் 12000 ரன்களை நெருங்கி வருகிறார். ரோஹித் மற்றும் விராட் கோலியின் வருகை அணிக்கு பேட்டிங்கில் வலுசேர்க்கும். அவர்கள் இருவரும் அணியில் இருப்பது இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்றார். 

டி20 உலகக் கோப்பை ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com