ரஷித் கான் அணியில் இல்லாததை மற்ற வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்: ஆப்கன் பயிற்சியாளர்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ரஷித் கான் இடம்பெறாதது மற்ற ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் வாய்ப்பு என அந்த அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் தெரிவித்தார்.
ரஷித் கான் அணியில் இல்லாததை மற்ற வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்: ஆப்கன் பயிற்சியாளர்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ரஷித் கான் இடம்பெறாதது மற்ற ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் வாய்ப்பு என அந்த அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று (ஜனவரி 11) மொஹாலியில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான் இடம்பெற்றபோதிலும், அவர் இந்த டி20 தொடரில் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷித் கான் காயத்திலிருந்து மீண்டு வருவதால்  அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ரஷித் கான் இடம்பெறாதது மற்ற ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்த கிடைத்திருக்கும் வாய்ப்பு என அந்த அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக  அவர் பேசியதாவது: ரஷித் கான் அணியில் இல்லை. ஆப்கானிஸ்தான் அணியில் உள்ள மற்ற வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த அவர்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு. இந்தியாவுக்கு எதிரான இந்த டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் ரஷித் கான் போன்று அவர்களும் ஆப்கானிஸ்தான் மக்களின் நாயகனாக மாறலாம்.

ரஷித் கான் அணியில் இல்லாதது அணியின் பலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அவர் மிகச் சிறந்த வீரர், சிறப்பான கேப்டன். அவரது பொறுப்புகளை இந்தியாவுக்கு  எதிரான தொடரில் யார் எடுத்துக் கொள்ளப்போகிறார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன். உலகக் கோப்பைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த டி20 தொடர் ஆப்கானிஸ்தான்  வீரர்களின் திறனை சோதிக்கும் விதமாக அமையும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com