ஷிவம் துபே, யுவராஜ் சிங்கை நினைவூட்டுகிறார்: ஆகாஷ் சோப்ரா 

கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் இந்திய வீரருமான ஆகாஷ் சோப்ரா, ஷிவம் துபேவின் ஆட்டம் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்குடன் ஒத்துப்போவதாக கூறியுள்ளார்.
ஷிவம் துபே, யுவராஜ் சிங்கை நினைவூட்டுகிறார்: ஆகாஷ் சோப்ரா 

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது டி20யில் நான்காவது இடத்தில் ஷிவம் துபே களமிறங்கினார். ஐந்து பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 63* ரன்கள் எடுத்தார். தொடரின் முதல் ஆட்டத்தில், துபே 40 பந்துகளில் 60* ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

துபேவின் சிக்ஸர்களை பார்த்து விராட் கோலி, ரோஹித் சர்மா வியந்த விடியோக்கள் இணையத்தில் வைரலானது. 

கிரிக்கெட் வர்ணனையாளரும் முன்னாள் இந்திய வீரருமான ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட விடியோவில் கூறியதாவது: 

ஷிவம் துபே - இந்த குழந்தைக்கு பந்தினை அடிக்கும் அபாரமான திறமை இருக்கிறது. அவர் குழந்தை அல்ல, அவருக்கு 30 வயது. தாமதமாகத் விளையாடத் தொடங்கினார். இடையில் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடவில்லை. குழந்தையாக இருந்தபோது, சில குடும்ப சிக்கல்கள் காரணமாக கிரிக்கெட்டை விட்டுவிட்டு திரும்பி வந்தவர். மே.இ.தீவுகள் எதிராக ஒரு போட்டியில் அரைசதம் அடித்தார். அதன் பிறகு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

அவர் மீண்டும் திரும்பி வந்தார், ஆனால் அவர் இங்கு விளையாடிய இரண்டு போட்டிகளில் 60-க்கும் அதிகமான ஸ்கோர்களை எடுத்தார். இரண்டு போட்டிகளிலும் ஸ்ட்ரைக் ரேட் சிறப்பாக இருந்தது. மேலும்  ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்தார். அவர் அடிக்கும் போது, யுவராஜ் சிங்கை லேசாக நினைவுபடுத்துகிறார்.

டி20 உலகக் கோப்பை நெருங்கி வருவதால், ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி இன்னும் கேள்விக்குரியாக இருப்பதால், இந்தியாவின் விளையாடும் லெவன் அணியில் இடம்பெறக்கூடிய விருப்பங்களில் ஒருவராக துபே உருவெடுத்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்து வரும் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், துபே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் மற்றும் அதிகபட்சமாக ஆறு மற்றும் பத்து பவுண்டரிகளை அடித்துள்ளார்.

உலகக் கோப்பைக்கு செல்வதற்கு சிவம் துபே மிகவும் தீவிரமான போட்டியாளராக நான் உணர்கிறேன், ஏனென்றால் சிக்ஸர் அடிக்க உங்களுக்கு பலம் தேவை. வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்களில் உங்களால் சிக்ஸர் அடிக்க முடியாது. மைதானம் பெரியது மற்றும் ஆடுகளங்கள் உள்ளன எனக் கூறினார். 

இந்தத் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மேலும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் புதன்கிழமை நடைபெறும் இறுதி டி20யில் இந்தியா வென்று ஒயிட்வாஷ்ஷில் (3-0) முடிக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com