
ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை இலங்கை வென்ற நிலையில், டி20 தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி கொழும்புவில் இன்று (ஜனவரி 18) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து, ஜிம்பாப்வே முதலில் பேட் செய்கிறது.
3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளதால் இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.