இவர்களை டி20 அணியில் சேர்ப்பது குறித்து யோசிப்போம்: ஆஸ்திரேலிய பயிற்சியாளர்

நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கு பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் அணியில் சேர்க்கப்படுவது குறித்து அணி நிர்வாகம் யோசிக்கும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கு பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் அணியில் சேர்க்கப்படுவது குறித்து அணி நிர்வாகம் யோசிக்கும் என ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரு மெக்டொனால்டு தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான டி20  தொடர் வருகிற பிப்ரவரியில் நடைபெறவுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர் வருகிற பிப்ரவரி 9 முதல் தொடங்கி பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடர் பிப்ரவரி 21 முதல் பிப்ரவரி 25  வரை நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில், நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கு பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் அணியில் சேர்க்கப்படுவது குறித்து அணி நிர்வாகம் யோசிக்கும் என ஆஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரு மெக்டொனால்டு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவின் வெவ்வேறு அணிகள் வெவ்வேறு வடிவிலான போட்டிகளில் விளையாடி வருகிறது. நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கு பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் அணியில் சேர்க்கப்படுவது குறித்து அணி நிர்வாகம் யோசிக்கும். இவர்கள் மூவரும் எதிர்வரும் டி20 தொடருக்கான அணியில் இடம்பிடிக்கலாம் அல்லது இடம்பிடிக்காமலும் போகலாம். நியூசிலாந்துக்கு எதிரான டி20  தொடருக்கு முழுமையான ஆஸ்திரேலிய அணியுடன் களமிறங்க முயற்சிப்போம். டி20  உலகக் கோப்பையை மனதில் வைத்து எதிர்வரும் டி20 தொடர்களுக்கான வீரர்கள் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com