11 வருடங்களுக்குப் பிறகு பிபிஎல் கோப்பையை வென்ற பிரிஸ்பேன்! 

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் லீக்கில் 11 வருடங்களுக்குப் பிறகு பிபிஎல் கோப்பியை வென்று அசத்தியுள்ளது பிரிஸ்பேன் ஹீட் அணி. 
படம்: பிபிஎல் | எக்ஸ்
படம்: பிபிஎல் | எக்ஸ்

கிரிக்கெட்டுக்கு மிகவும் புகழ்பெற்ற நாடு ஆஸ்திரேலியா. பல உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. அங்கும் ஐபிஎல் போன்று டி20 தொடர் நடைபெறுகிறது. அதற்கு பிபிஎல் (பிக் பேஸ் லீக்) என்று பெயர். 2011-12இல் முதல் தொடர் நடைபெற்றது. 

டிச.7ஆம் தேதி தொடங்கிய இந்தத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (ஜன.24) நடைபெற்றது. இதில்  பிரிஸ்பேன் ஹீட், சிட்னி சிக்ஸர் அணியுடன் மோதியது. 

முதலில் பேட்டிங் செய்த பிரிஸ்பேன் 166/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோஷ் ப்ரௌன் 53, ரென்ஷா 40, மெக்ஸ்வீனே 33 ரன்கள் எடுத்தனர். 

அடுத்து ஆடிய சிட்னி சிக்ஸர் 17.3 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானார்கள். இதில் அதிகபட்சமாக கேப்டன் ஹெண்ட்ரிக்ஸ் 25, ஜோஷ் பிலிப் 23 ரன்களும் எடுத்தனர். 

பிரிஸ்பேன் சார்பாக ஸ்பென்சர் ஜான்சன் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இந்த சிறப்பான பந்து வீச்சுக்கு ஆட்ட நாயகன் விருதினை வென்றார். 

54 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இது 2வது முறையாகும். ஏற்கனவே 2012-13 ஆம் ஆண்டில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றது அந்தணிக்கும் ரசிகர்களுக்கும் நெகிழ்ச்சியாக இருப்பதாக சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com