பேஷ்பால் யுக்திக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: ராகுல் டிராவிட்

இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்திக்கு பதிலடி கொடுத்தால்தான் இந்திய அணியால் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட முடியும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
பேஷ்பால் யுக்திக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: ராகுல் டிராவிட்

இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்திக்கு பதிலடி கொடுத்தால்தான் இந்திய அணியால் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட முடியும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: இங்கிலாந்தின் பேஷ்பால் யுக்திக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும். தரமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பலமுறை தொடர்ச்சியாக ஸ்வீப் ஷாட்டுகள் விளையாடியதை இதற்கு முன் பார்த்ததில்லை. இதற்கு முன்பு விளையாடியவர்கள் இதுபோன்று வித்தியாசமான யுக்திகளை எப்போதாவது பயன்படுத்தி சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடுவார்கள். ஆனால், இந்த யுக்தியை தொடர்ச்சியாக தவறுகள் எதுவும் செய்யாமல் விளையாடுவது புதிதாக உள்ளது. ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகளை பலமுறை விளையாடி பந்துவீச்சாளர்களுக்கு ஆலி போப் அழுத்தத்தை ஏற்படுத்தினார்.

ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டுகள் விளையாடப்படுவதை கடந்த காலங்களில் பல போட்டிகளில் பார்த்திருக்கிறோம். தொடர்ச்சியாக அதுவும் வெற்றிகரமாக விளையாடுவது கடினமான ஒன்று. அதனை ஆலி போப் சிறப்பாக செயல்படுத்தினார். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் இது போன்ற சவாலை முதல் முறையாக சந்திக்கவில்லை. இதனை எப்படி திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும். சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக திட்டமிட்டு அடுத்தடுத்தப் போட்டிகளில் இங்கிலாந்து வீரர்களுக்கு நெருக்கடி அளிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com